Posts

  வேளாண் அறிவியல் மையம் தென்காசியில் , தீவனச் சோளம் கோ எப் எஸ் 31 (CO FS 31) விதை மற்றும் சூப்பர் நேப்பியர் கரணைகள்   கிடைக்கும்.
  ஆர்கானிக் முறையில் தென்னை , தக்காளி , வெங்காயம் , கத்தரி சாகுபடி செய்யும்   விவசாயிகளுக்கு , தென்னையில் வாடல் மற்றும்   காய்கறி நாற்றுகளில் வேர் அழுகல் தாக்கத்தினை கட்டுபடுத்தவும் , மண்ணில் சத்துகளை பெருக்கவும்   உதவும் டிரைக்கோடேர்மா ( Trichoderma) மற்றும் சூடோமோனாஸ் ( Pseudomonas) உயிரி கலவைகள் இங்கு கிடைக்கும். ( சில்லறை மற்றும் மொத்தமாக. விலை: கிலோ 130 ரூபாய் )   அணுகவும்: தென்காசி ICAR RVS வேளாண் அறிவியல் மையம் , RVS பண்ணை , கடைய நல்லூர். Contact: 93616 25944   இடக்குறிப்பு ( location): RVS Krishi Vigyan Kendra,Tirunelveli (Tenkasi) Dt.   Google map- இல் https://maps.app.goo.gl/n2XiJXWnwW9NtZ838
  * இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்   ஆர்கானிக் முறையின் புதிய நுட்பங்கள் :* உரங்கள் மற்றும் நோய் கொல்லி மருந்துகளை குறைத்து மண் வளத்தை மேம்படுத்த உதவும் ஆர்கானிக் உரங்கள் & நோய் கொல்லிகள் இங்கு கிடைக்கும்.   1. ரைசோபியம் - மண்ணில் தழை சத்துகாக   2. பாஸ்போபாக்டீரியா - மண்ணில் மணி சத்துக்கு மாற்றாக   3. சூடோமோனாஸ் மற்றும்   டிரைகோடெர்மா - மண்ணில் தீமை செய்யும் உயிர்களை கொல்ல & மண்ணில் உள்ள சத்துக்களை அதிகப்படுத்த.   4. Poly Functional Microbia - நுண்ணுட்டதை செடிகளுக்கு கிடைக்க செய்ய.   இங்கு கிடைக்கும். ( *சில்லறை மற்றும் மொத்தமாக)   அணுகவும்: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் , ( ஆர் வி எஸ்) வேளாண் அறிவியல் மையம் , RVS பண்ணை , கடைய நல்லூர். Contact: 93616 25944   இடக்குறிப்பு ( location): Krishi Vigyan Kendra,Tirunelveli (Tenkasi) Dt.   Google map- இல் https://maps.app.goo.gl/n2XiJXWnwW9NtZ838

வானிலை முன் அறிக்கை - 21.07.2021 - 25.07.2021

 வானிலை முன் அறிக்கை - 21.07.2021 - 25.07.2021 வரை திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 டிகிரி செல்சியஸ் முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மணிக்கு காற்றின் வேகம் 10-25 கிலோமீட்டர் /மணி வேகத்தில் வரக்கூடும். காற்றின் திசை  மேற்கு திசைகளில் இருந்து வீசக்கூடும்.
 TNAU நிலக்கடலை ரிச் நிலக்கடலைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர் பயன்கள் • அதிக பூ பிடிக்கும் திறன் • குறைந்த பொக்கு கடலைகள் • விளைச்சல் 15 சதம் வரை கூடும் • வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும் பயன்படுத்தும் முறை •   அளவு :ஏக்கருக்கு 2கிலோ •    தெளிப்பு திரவம  : 200 லிட்டர் •   தெளிக்கும் பருவம : பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவம் •   தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்
Image
 வேளாண் அறிவியல் மையம் தென்காசியில், லக்னோ 49 கொய்யா கன்றுகள் விற்பனைக்கு உள்ளது. (ரூபாய் 50/கன்று)விவசாயிகள் பயன் பெற்றுக் கொள்ளவும்.
 பெண்கள்களின் வேலை பலுவை குறைக்கும் வெண்டை வெட்டும் கருவி தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்  அறிமுகப்படுத்தியுள்ளது. இது கை உறையுடன் பயன்படுத்தும் போது சுணையால் ஏற்படும் அரிப்பை தவிர்க்கலாம். கை, முதுகு மற்றும் தோள்பட்டை வலி ஏற்படாது. வெண்டை வெட்டும் கருவியின் மூலம் விரைவாக வேலையை முடித்து விடலாம். ஒரு கருவின் விலை ரூ. 100.